சினிமா
கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன்!
கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன்!
இயக்குநர் வெற்றிமாறன் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தkuமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் 10 லட்ச ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஏ.ஆர் முருகதாஸ் 25 லட்சமும், இயக்குநர் ஷங்கர் 10 லட்சமும் இன்று அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது