\
வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் - மிரட்டும் ’அதிகாரம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் - மிரட்டும் ’அதிகாரம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் - மிரட்டும் ’அதிகாரம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on

வெற்றிமாறன் கதை, தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது

தமிழின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தற்போது, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கிவரும் ’ருத்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மலையாளத்தில் வெற்றிபெற்ற ’ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், லாரன்ஸின் அடுத்தப்பட அறிவிப்பு படத்தலைப்புடன் இன்று வெளியாகி இருக்கிறது.

இப்படத்திற்கு வெற்றிமாறான் கதை,திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார்.  படத்திற்கு ‘அதிகாரம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெற்றிமாறன் 'உதயம்', 'காக்காமுட்டை', 'விசாரணை', 'வட சென்னை’ படங்களை தயாரித்தார். இப்போது, லாரன்ஸின் ’அதிகாரம்’ படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயாரிக்கிறார். வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான ’பொல்லாதவன்’ படத்தையும், 6 தேசிய விருதுகளைக் குவித்த ‘ஆடுகளம்’ படத்தையும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்தான் தயாரித்தார். அதோடு, கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா’ படத்தையும் இவர்தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

பான் இந்தியா படமாக உருவாகும் ’அதிகாரம்’ படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரும் ’எதிர் நீச்சல்’, ’காக்கிசட்டை’, ’கொடி’ படங்களை இயக்கியவருமான இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதன் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகி மலேசியாவில் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com