\
Vijay, vetrimaaran
Vijay, vetrimaaranPt web

”அண்ணாவையும் படிக்கணும்”- அசுரன் வசனத்தை விஜய் பேசியது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் அளித்த பதில்!

அசுரன் பட வசனத்தை விஜய் மேற்கோள் காட்டி பேசியது குறித்த கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Published on

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 234 தொகுதி மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பெசிய விஜய், ”சமீபத்துல ஒரு படத்துல ஒரு டயலாக் வந்திருந்துச்சு பாத்தேன், கேட்டேன். காடு இருந்தா எடுத்துக்குவானுக. ரூபா இருந்தா புடுங்கிக்குவானுக. ஆனா படிப்பை மட்டும் ஓங்கிட்ட இருந்து எடுத்துகவே முடியாது. அது என்னை ரொம்ப பாதித்த லைன்ஸ்” என்று பேசியிருந்தார். இந்த வசனம் அசுரன் படத்தின் க்ளைமேக்ஸில் இடம்பெற்ற வசனம். இந்த வசனத்திற்கு படம் வெளியான போது பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், அசுரன் பட வசனத்தை விஜய் மேற்கோள் காட்டி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

vijay
vijayPT

”சினிமாவுல நாம சொல்லுற ஒரு விசயம், முக்கியமான நபர்களை சென்றடையும் போது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்' 'நம்ம வரலாறை தெரிஞ்சுக்க வேண்டுமில்லையா அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாத்தை படிக்கணும். அண்ணாவையும் படிக்கணும்னு ஆசைபடுறேன்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com