\
கங்கை அமரன் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்!

கங்கை அமரன் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்!

கங்கை அமரன் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்!
Published on: 

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரனின் தாயாருமான மணிமேகலை உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் 80ஸ் காலக்கட்டங்களில் தமிழில் முன்னணி இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து தற்போது பாஜகவில் இருக்கிறார். 69 வயதாகும் இவரது மனைவி மணிமேகலை உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பாஜக தலைவர் எல்.முருகனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com