தனது ஹீரோயினை மணந்தார் இயக்குனர் வேலு பிரபாகரன்!

தனது ஹீரோயினை மணந்தார் இயக்குனர் வேலு பிரபாகரன்!

தனது ஹீரோயினை மணந்தார் இயக்குனர் வேலு பிரபாகரன்!
Published on

இயக்குனர் வேலு பிரபாகரன் திருமணம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று காலை நடந்தது.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உட்பட சில படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கி நடித்துள்ள, ’ஒரு இயக்குனரின் காதல் டைரி’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் வேலுபிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணம், லீ மேஜிக் லாண்டன் பிரிவியூ தியேட்டரில் சினிமா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று காலை நடந்தது. 

நடிகை ஷெர்லி தாஸ், வேலு பிரபாகரன் இயக்கிய ’வேலு பிரபாகரனின் காதல் கதை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இதில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com