வசந்தபாலனின் ‘அநீதி’ - படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

வசந்தபாலனின் ‘அநீதி’ - படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
வசந்தபாலனின் ‘அநீதி’ - படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

'ஜெயில்’ படத்திற்குப் பிறகு வசந்தபாலன் ‘அநீதி’ படத்தை இயக்கி வருகிறார். ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘அந்தகாரம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா’ துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா,இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல் வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்று சொல்லப்படுகிறது. பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர். வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்த நிலையில், படப்பிடிப்பை முழுவதுமாக முடித்திருக்கிறது படக்குழு. இதனை உற்சாகமுடன் அறிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com