தஞ்சை மாவட்டம் திருவையாறில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடு செய்தார்.
நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் படித்துறையில் பொங்கல் வைத்து படையல்போட்டு காவேரி தாயை வழிபட்டு பாடினார். அவர் கடந்த முறை திருவையாறு வந்தபோது காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லை அப்பொழுது காவேரி ஆற்றில் மண்டியிட்டு கையை ஏந்தி காவேரிதாயை வணங்கி பாடினார். இப்போது காவேரி ஆற்றின் இரண்டு கரையை தொட்டு தண்ணீர் ஓடுவதை பார்த்து மேலம் அடித்து தாகத்தோடுவந்த காவேரியே எங்க தாகம்தீர்க்கவந்த காவேரி தாயே என்று மணம் உருகி பாடினார். பிறகு நிருபர் இடம் பேட்டியில் கூறியதாவது:-
காவேரிதாயை வணங்குவதில் பாதிபேர் என்னை கிண்டல் செய்தார்கள் நான் சிவன்தொண்டன், இந்தமண்ணின் மகிமை அம்மா தாயே தமிழன் மக்கள் வாடுகிறார்கள் என்று பாடினேன். இன்று தண்ணீர் கரைபுறண்டு ஓடுகிறது அதையும் வணங்கி பாடியுள்ளேன். காலையில் பூம்புகாரில் நீராடினேன், மாலையில் திருவையாறில் காவேரிதாயை வணங்கினேன், நான் பெண்களை தெய்வமாக நினைப்பவன் சினிமாவில் தொட்டதே இல்லை, வசனங்கள் சொல்லுபோது கூட தொட்டு நடித்ததில்லை, என்னை வாழவைத்ததே தாய்தான், பெண்ணும் தாய்தான் சினிமாவில் நான் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அணைவருக்கும் பாடி உள்ளேன் என்று கூறினார்.