விஜய், அஜித் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் தரவில்லை: இயக்குநர் சுசீந்திரன் வருத்தம்
விஜய், அஜித் தனக்கு அப்பாயிண்ட்மெண்ட் தரவில்லை என்று இயக்குநர் சுசீந்திரன் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் விரைவில் வெளி வர உள்ளது. ஏற்கெனவே இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவித்திருந்தனர். ஆனால் வெளிவரவில்லை. சரியான திரயரங்குகள் கிடக்காததால் முடிவை திரும்ப பெற்றது படக்குழு. அடுத்து நவம்பர் 10 அன்று படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுசீந்திரனிடம் கார்த்தி, விஷாலுக்கு பிறகு பெரிய நடிகர்களை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. விஜய்யிடம் கதை சொல்ல அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். தருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. அஜித்திடமும் முயற்சித்தேன். இதுவரை கிடைக்கவில்லை என்று வருத்ததுடன் கூறியிருக்கிறார்.