\
'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவுக்கு சுசீந்திரன் பாராட்டு

'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவுக்கு சுசீந்திரன் பாராட்டு

'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவுக்கு சுசீந்திரன் பாராட்டு
Published on

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள "தீரன் அதிகாரம் ஒன்று" படக்குழுவினருக்கு இயக்குநர் சுதீந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கார்த்தி, ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் சதுரங்க வேட்டை எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவினருக்கு இயக்குநர் சுதீந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " போலீசை பெருமைப்படுத்தும் படம். இயக்குநர் வினோத்தின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநராக வினோத் உயர்வார் என்ற நம்பிக்கையை இப்படம் உறுதிப்படுத்தி உள்ளது. கார்த்தியின் நேர்த்தியான நடிப்பு, சத்தியன் ஒளிப்பதிவு என அனைத்தும் அருமை. இயக்குநர் வினோத்திற்கு எனது சல்யூட்" என புகழாரம் சூட்டியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com