\
நாயகியிடம் மன்னிப்பு கோரினார் இயக்குநர் சுசீந்திரன்

நாயகியிடம் மன்னிப்பு கோரினார் இயக்குநர் சுசீந்திரன்

நாயகியிடம் மன்னிப்பு கோரினார் இயக்குநர் சுசீந்திரன்
Published on

நெஞ்சில் துணிவிருந்தால் படநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியதால் படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மன்னிப்பு கோரினார்.  

நடிகர் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, நடிகை மெஹ்ரீன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நெஞ்சில் துணிவிருந்தால்’  திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு வந்த கலவையான விமர்சனங்கள் அடிப்படையில் இந்த படத்தின் க்ளைமாஸ் காட்சிகள் மற்றும் இடைவேளை காட்சிகள் மாற்றப்பட்டு இன்று முதல் புதிய வெர்சன் திரையில் வெளியிடப்படுவதாக இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

மேலும் படத்தில் நடிகை மெஹ்ரீன் இடம்பெறும் காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்படுள்ளதால் அவரிடம் சுசீந்திரன் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து பேசிய அவர்,சூழ்நிலை காரணமாக மெஹ்ரீன் இடம்பெறும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். படத்தின் விமர்சனங்கள் அடிப்படையில் சுமார் 20 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டு நெஞ்சில் துணிவிருந்தால் புதிய வெர்ஷன் இன்று முதல் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் என்றும் சுசீந்திரன் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com