\
“பிளாஸ்மா நன்கொடை வழங்க காத்திருக்கிறோம்” - இயக்குநர் ராஜமவுலி

“பிளாஸ்மா நன்கொடை வழங்க காத்திருக்கிறோம்” - இயக்குநர் ராஜமவுலி

“பிளாஸ்மா நன்கொடை வழங்க காத்திருக்கிறோம்” - இயக்குநர் ராஜமவுலி
Published on

பாகுபலி திரைப்ப‌ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான லேசான அறிகுறி தென்பட்டதை அடுத்து எஸ்.எஸ்.ராஜமவுலி தனது குடும்பத்துடன் கடந்த மாதம் 29 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவர்கள் அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதை அடுத்து, இரு வாரங்களாக வீ‌‌ட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு கொரோனா நீங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜமவுலி தனது ட்விட்டர் பக்கத்தில், “தனிமைப்படுத்தப்பட்ட 2 வாரங்கள் முடிந்தது. அறிகுறிகள் இல்லை. அதனால் பரிசோதனை செய்து கொண்டோம். எங்கள் எல்லோருக்கும் நெகட்டிவ் என்று வந்துள்ளது. பிளாஸ்மா நன்கொடை வழங்க 3 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com