ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து வரும் படம், ’அருவா சண்ட’. கபடி வீரர் ராஜா ஹீரோ. நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், சௌந்தர்ராஜா, காதல் சுகுமார், மதுரை சுஜாதா உட்பட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி ஆதிராஜன் கூறும்போது, ‘ காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் படத்தின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்துவிட்டு எரிகிறது.
தர்மபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன. இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இதன் திரைக்கதை. கிளைமாக்ஸ் மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கி எடுக்கும். கபடி வீரர்களின் லட்சியங்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் படம் அமைந்திருக்கிறது’ என்றார்.
படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி இப்போது நடந்து வருகிறது.