’அண்ணாத்த’ படத்தின் அப்டேட் கொடுத்த சிறுத்தை சிவா!

’அண்ணாத்த’ படத்தின் அப்டேட் கொடுத்த சிறுத்தை சிவா!
’அண்ணாத்த’ படத்தின் அப்டேட் கொடுத்த சிறுத்தை சிவா!

இன்று நடிகர் ரஜினியின் 70 வது பிறந்தநாளையொட்டி ’அண்ணாத்த’ படத்தை இயக்கிவரும் இயக்குநர் சிறுத்தை புதிய அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளார்

கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ’விஸ்வாசம்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால், தனது அடுத்தப் படத்தினை இயக்கும் வாய்ப்பை ரஜினி ’சிறுத்தை’ சிவாவுக்கு கொடுத்துள்ளார். ரஜினியின் 168 வது படமான ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் அப்டேட் கேட்டுவந்த நிலையில், இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் 15 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது என்பதை வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா ’அண்ணாத்த’ படம் குறித்து பேசும் வீடியோவையும் வெளியிட்டு அப்டேட் கொடுத்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ”அண்ணாத்த டீம் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் மேலும் மேலும் வளர்ந்து மேலும் மேலும் சிறந்து நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ரசிகர்களின் வாழ்த்துகளுடன் ஆதரவுடன் இறைவனின் நல்லாசியுடன் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை துவங்குகிறோம். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நல்ல டீமுடன் சன் பிக்சர்ஸ் ஆதரவுடன் மிகப்பெரிய படமாக அண்ணாத்த வந்துகொண்டிருக்கிறது” என்று உற்சாகமுடன் பேசி அப்டேட் கொடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com