அஜித் சிக்ஸ் பேக் கெட்டப் கிராபிக்ஸா?: சிறுத்தை சிவா விளக்கம்
விவேகம் படத்தில் அஜித்தின் சிக்ஸ் பேக் கெட்டப் போஸ்டர்கள் கிராபிக்ஸ் என சமூக வலைத்தளங்கில் ஒருசிலர் கருத்து தெரிவிக்கும் நிலையில் அதற்கு அப்படத்தின் இயக்குர் சிறுத்தை சிவா விளக்கம் கொடுத்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விவேகம். விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் சிக்ஸ் பேக் வைத்து வைத்து அசத்தியிருந்தார். தொடர்ச்சியாக வரும் போஸ்டர்களிலும் அஜித் உடலை நன்றாக ஏத்தி கம்பீரமாக காட்சியளிக்கிறார். அஜித்தின் இந்த கெட்டப்பை திரையில் எப்போது காண்போம் என ரசிர்கள் ஒருபுறம் காத்திருந்தாலும் மறுபுறம் அஜித்தை பிடிக்காதவர்கள், அஜித் சிக்ஸ் பேக்ஸ்-லாம் வைக்கவில்லை. இது எல்லாம் கிராபிக்ஸ் என தெரிவித்து வருகின்றனர். இதனால் அஜித் ரசிர்கள் மற்றும் அவரை விரும்பாதவர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கடும் மோதல் வெடித்து வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள விவேகம் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, "கிராபிக்ஸ் என்று சொல்வதை பற்றி நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. வேலையை விட்டுவிட்டு அவர்களுக்கு பதில் அளித்து கொண்டிருந்தால் நம் வேலை தான் கெடும். எங்களால் முடிந்த வரை வேலைகளை சிறப்பாக செய்கிறோம். உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், அங்கீகாரமும் எங்களுக்கு விரைவில் நிச்சயம் கிடைக்கும்" என்றார்.