\
ஷங்கரின் அடுத்தபடம் இதுதானாம்

ஷங்கரின் அடுத்தபடம் இதுதானாம்

ஷங்கரின் அடுத்தபடம் இதுதானாம்
Published on

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான படம் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி. முதல்வன், காதல் படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக இப்படத்தை தயாரித்திருந்தார் இயக்குனர் ஷங்கர் . ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது.

படம் ரீலிஸ் ஆகி 11 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.o-வின் இறுதிக்கட்ட இயக்கப் பணிகளில் ஷங்கர் தற்போது பிஸியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com