சினிமா
இயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு!
இயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு!
இயக்குநர் ஷங்கரின் அம்மா முத்துலட்சுமி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார்.
பிரமாண்டம், அதிநவீன தொழில்நுட்பம், பலகோடி பட்ஜெட் என்றாலே ஜெட் வேகத்தில் நினைவுக்கு வருபவர் இயக்குநர் ஷங்கர்தான். சமூகத்தில், இப்படியொரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா? என்று கற்பனைக்கு எட்டாத சூப்பர் ஹீரோதான் ஷங்கரின் கதைக்கரு:கதாநாயகர்கள். இதனாலேயே, இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமா மட்டுமல்ல…. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கிறார்.
ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளும் ஷங்கருக்கு பிரச்சனைக்குரிய சோகமான ஆண்டுகள்தான். ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை, லைகாவுடன் மோதல் என இருப்பவருக்கு மேலும், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 88 வயதாகும் அவரது தாயார் முத்துலட்சுமி இன்று வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்துள்ளார்.