\
ஷங்கர் - ராம் சரண் படத்தை ரூ. 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிய ஜீ ஸ்டுடியோஸ்

ஷங்கர் - ராம் சரண் படத்தை ரூ. 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிய ஜீ ஸ்டுடியோஸ்

ஷங்கர் - ராம் சரண் படத்தை ரூ. 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிய ஜீ ஸ்டுடியோஸ்
Published on

ஷங்கர் -ராம் சரண் இணையும் படத்தின் தியேட்டர் மற்றும் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தமிழ்,தெலுங்கில் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

170 கோடியில் இப்படம் உருவாகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் தியேட்டர் உரிமை தியேட்டர் வெளியீட்டுக்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை என மொத்தமாக ஜீ ஸ்டுடியோஸ் 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com