\
செப்டம்பரில் தொடங்கும் ஷங்கர் - ராம் சரண் படப்பிடிப்பு

செப்டம்பரில் தொடங்கும் ஷங்கர் - ராம் சரண் படப்பிடிப்பு

செப்டம்பரில் தொடங்கும் ஷங்கர் - ராம் சரண் படப்பிடிப்பு
Published on: 

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவிருக்கிறது.

’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிரார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகிகளாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பாடலுடன் தொடங்கவிருக்கிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியானவுடனே முதலில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது நடன இயக்குநர் ஜானி மாஸ்டரைத்தான். அதற்கடுத்துதான், இசையமைப்பாளர் தமனை அறிமுகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com