\
'இயக்குநர் ஷங்கர் - ராம் சரண்' இணையும் புதியப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'இயக்குநர் ஷங்கர் - ராம் சரண்' இணையும் புதியப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'இயக்குநர் ஷங்கர் - ராம் சரண்' இணையும் புதியப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் இயக்குநர் ஷங்கருடன் இணைய இருக்கும் படத்தை தயாரிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ராஜெமளலி இயக்கிவரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  இயக்குனர் ஷங்கர்,அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

இந்தப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனரான தில் ராஜு கூறும் போது, “ "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்றார்.

இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் இணையும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது திரைப்படமாகவும் அமைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com