ராம் சரண் படத்துக்கு 200 கோடி பட்ஜெட் போட்ட ஷங்கர்: 170 கோடியாக குறைத்த தில் ராஜு

ராம் சரண் படத்துக்கு 200 கோடி பட்ஜெட் போட்ட ஷங்கர்: 170 கோடியாக குறைத்த தில் ராஜு

ராம் சரண் படத்துக்கு 200 கோடி பட்ஜெட் போட்ட ஷங்கர்: 170 கோடியாக குறைத்த தில் ராஜு
Published on

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் ’ராம் சரண் 15’ படத்தில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், ‘ராம் சரண் 15’ படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிவரை ஆகும் என்று திட்டமிட்டு தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் சொல்லியுள்ளார் ஷங்கர். ஆனால், தயாரிப்பாளர் தில் ராஜு ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 170 கோடி பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க முடிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com