சினிமா
மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.
’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தனது நான்காவது படத்தில் இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து இயக்கவிருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன் ஜி அதிகாரபூர்வமாக செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.