தனுஷுடன் நடிக்கும் செல்வராகவன்?: பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் தாணு

தனுஷுடன் நடிக்கும் செல்வராகவன்?: பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் தாணு
தனுஷுடன் நடிக்கும் செல்வராகவன்?: பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் தாணு

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவனும் நடிக்கிறார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார், தயாரிப்பாளர் தாணு.

இன்று இயக்குநர் செல்வராகவனின் 45 வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் படக்குழுவினரும் கொண்டாடி வருகிறார்கள். தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வரும் செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’, மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தினையும் இயக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், செல்வராகவன் பிறந்தாளையொட்டி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார், ‘நானே வருவேன்’ தயாரிப்பாளர் தாணு. ”இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராகவன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்” என்று ’நானே வருவேன்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில், தனுஷ் பாதியாகவும் வித்தியாசமான கெட்டப்பில் செல்வராகவனும் கவனம் ஈர்க்கிறார்கள். தாணுவின் இந்தத் தகவலால் தனுஷ் - செல்வராகவன் ரசிகர்கள் உற்சாகமடைந்து கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக, தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதற்கிடையில், இயக்குநர் செல்வராகவன் - நடிகர் தனுஷ் கூட்டணி ’மயக்கம் என்ன’ படத்திற்கு அடுத்து, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் இணைந்துள்ளனர். ’நானே வருவேன்’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com