“வண்ணநிலவே வண்ண நிலவே வருவது நீதானா” பாடலில் நடித்தது ரம்பாவே இல்லை! 25வருட ரகசியம் உடைத்த இயக்குநர்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா! பாடலில் நடித்திருப்பது ரம்பாவே இல்லை என அப்படத்தின் இயக்குநர் செல்வபாரதி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்தேன் வந்தாய்
நினைத்தேன் வந்தாய்Web

விஜய் ரசிகர்கள் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களின் விருப்பமான 90ஸ் பாடல்களில் ஒன்று விஜய் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம்பெற்ற “வண்ண நிலவே பாடல்” என்றால் அது மிகையாகாது.

நினைத்தேன் வந்தாய்
நினைத்தேன் வந்தாய்

விஜய், ரம்பா, தேவயானி நடிப்பில் செல்வபாரதி இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நினைத்தேன் வந்தாய். ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்த நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னவளே என்னவளே, உன் மார்பில் விழிமூடி, மல்லிகையே மல்லிகையே, உன்னை நினைத்து நான் எனை மறப்பது மற்றும் வண்ண நிலவே வண்ண நிலவே” முதலிய அத்தனை பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டான பாடல்களாகும். அதுமட்டுமல்லாமல் செல்வபாரதி இயக்கத்தில் விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா முதலிய படங்கள் எப்போதும் 90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான திரைப்படமாகும்.

நினைத்தேன் வந்தாய்
நினைத்தேன் வந்தாய்

இந்நிலையில் தான் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் விருப்பமான பாடலான நினைத்தேன் வந்தாய் பாடலில் சுமார் 45 ஷாட்களில் ரம்பாவே இடம்பெறவில்லை என அப்படத்தின் இயக்குநர் செல்வபாரதி தெரிவித்துள்ளார். இந்தசெய்தி ஒட்டுமொத்த 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒன்றல்ல ரம்பா இல்லாமல் 45 ஷாட்கள் இடம்பெற்றுள்ளன!

நினைத்தேன் வந்தாய் படம் குறித்தும், அப்படத்தில் ரம்பா உடனான பிரச்னை குறித்தும் இயக்குநர் செல்வபாரதி பேசியிருக்கும் வீடியோ வைரலாக தற்போது பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், “நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிக்கும் போது எனக்கும், ரம்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது. நினைத்தேன் வந்தாய் படத்தை முடித்து தராமலேயே தெலுங்கு படம் ஒன்றிற்கு தேதி கொடுத்துவிட்டு நடிக்காமல் சென்றுவிட்டார் ரம்பா. நான் எவ்வளவோ கூறியும் அதை ஏற்காமல் அவர் பாட்டுக்கு சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.

வண்ண நிலவே பாடல்
வண்ண நிலவே பாடல்

அதனால் கோவமடைந்ததாக கூறியிருக்கும் செல்வபாரதி, “அப்போது வண்ண நிலவே பாடல் முழுவதுமாக முடிக்காமலயே இருந்தது. ரம்பா நடிக்கவேண்டிய பாதி ஷாட்கள் நடிக்காமலயே போய்விட்டார். நாம ஒரு டைரக்டர் சொல்றோம், நம்மள மதிக்காமயே போய்ட்டாங்களே, முதல் படம் பண்ணா நான் டைரக்டர் இல்லையா, இனி இவங்கள கூப்பிடனுமானு எனக்கு கோவம் வந்துடுச்சி. நம்மள மதிக்கல அவங்கள வச்சி பாட்டு பண்ணனுமானு, ரம்பா கிட்ட இருந்த காஸ்டியூம் டிரஸ்ஸ மட்டும் வாங்கிட்டு வாங்கனு சொல்லி, ஒரு ஜூனியர் நடிகையை வச்சி பாடல் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டன்.

வண்ண நிலவே பாடல்
வண்ண நிலவே பாடல்

இதுவரை இந்த விசயம் யாருக்கும் தெரியாது, வண்ண நிலவே பாடலில் வரும் பாதி ஷாட்கள் ரம்பாவே இல்லை. கிட்டத்தட்ட 46 ஷாட்களில் ரம்பா இல்லாமலே எடுத்து முடிச்சன். இப்போ எடுத்து பாருங்க பாட்டுல வர 46 ஷாட்ல ரம்பா இல்லாமயே பாட்டு இருக்கும். பாட்டுல ஊஞ்சலில் இருப்பது மட்டும் தான் ரம்பா, மற்றபடி ஓடிவர மாதிரி இருக்குறது எல்லாமே ரம்பா இல்லை, ஜூனியர் ஆர்டிஸ்ட் வச்சே பாட்ட எடுத்து முடிச்சன். அவ்வளவு கோவம் இருந்துச்சு” என்று அதிர்ச்சிகரமான தகவலை செல்வபாரதி பகிர்ந்துள்ளார்.

முன் காட்சியில் ரம்பாவும், அவங்க அம்மாவும் எழுந்து போய்ட்டாங்க!

படத்தின் ப்ரீவியூ காட்சியின் போது நடந்ததை பற்றி கூறியிருக்கும் செல்வபாரதி, “பாட்டுல நடந்தது எதுவுமே ரம்பாவுக்கு தெரியாது. நினைத்தேன் வந்தாய் படத்தோட ப்ரீவியூ ஷோ போட்டு படம் பார்த்துட்டு இருக்கோம், வண்ண நிலவே பாடல் வந்ததும் ரம்பாவும், அவங்க அம்மாவும் எழுந்து போய்ட்டாங்க. எனக்கு தெரிஞ்சுபோச்சு இந்த விசயத்தால தான் எழுந்து போய்ட்டாங்க” என்று இண்டர்வியூ கணோளி ஒன்றில் செல்வபாரதி பேசியுள்ளார்.

இயக்குநர் செல்வபாரதி பேசிய இந்த வீடியோ காணோளி நக்கீரனுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி என்று தெரிகிறது. ஆனால் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com