சினிமா
“சார்பட்டா பரம்பரையின் ஒவ்வொரு சிறு பகுதிகளையும் மிகவும் ரசித்தேன்” - செல்வராகவன்
“சார்பட்டா பரம்பரையின் ஒவ்வொரு சிறு பகுதிகளையும் மிகவும் ரசித்தேன்” - செல்வராகவன்
’சார்பட்டா பரம்பரை படத்தின் ஒவ்வொரு சிறு பகுதிகளையும் மிகவும் ரசித்தேன்’ என்று கூறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘சார்பட்டா பரம்பரை நல்ல திரைப்படம் ரஞ்சித்.
ஒவ்வொரு சிறு பகுதிகளையும் மிகவும் ரசித்தேன். ஆர்யா, அழகு, ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜொலிக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்”
இயக்குநர் சுசீந்திரனும் படத்தைப் பாராட்டி கடிதம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.