\
அன்புச்செழியன் உத்தமர்: சீனுராமசாமி

அன்புச்செழியன் உத்தமர்: சீனுராமசாமி

அன்புச்செழியன் உத்தமர்: சீனுராமசாமி
Published on

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில் அன்புச்செழியனுக்கு எதிராக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்போது இயக்குநர் சீனுராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. எம்ஜிஆர், சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். நான் நியாயத்தின் பக்கமே’ என்று பதிவிட்டுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com