\
சீனு ராமசாமி - ஜி.வி பிரகாஷின் "இடிமுழக்கம்" படப்பிடிப்பு நிறைவு

சீனு ராமசாமி - ஜி.வி பிரகாஷின் "இடிமுழக்கம்" படப்பிடிப்பு நிறைவு

சீனு ராமசாமி - ஜி.வி பிரகாஷின் "இடிமுழக்கம்" படப்பிடிப்பு நிறைவு
Published on

சீனு ராமசாமி - ஜி.வி பிரகாஷின் ’இடிமுழக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் ஜி.வி பிரகாஷுடன் ’இடிமுழக்கம்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, ஆக்‌ஷன் த்ரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படம் என்று சொல்லப்படுகிறது.

ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தேனியில் 20 நாட்கள் நடைபெற்று வந்தது. அதன்பிறகு, தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை, உற்சாகமுடன் புகைப்படத்துடன் அறிவித்திருக்கிறது படக்குழு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com