நான் ஒருத்தனை இழந்துவிட்டு நிற்கிறேன்: சசிகுமார் பேட்டி
நான் ஒருத்தனை இழந்துவிட்டு நிற்கிறேன் என்று இயக்குநர், நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.
கந்து வட்டி விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டு அசோக்குமார் இறந்துபோனார். இந்நிலையில் அவரது மரணத்திற்கு சினிமா ஃபைனாசியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று கூறி அவர் கடித்தம் எழுதி வைத்திருந்து சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த சம்பவம் குறித்து தனது தரப்பு சாட்சியத்தை காவல்துறையினரிடன் இன்று சசிகுமார் தெரிவிக்க வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் “என் அத்தை பையந்தான் அசோக்குமார். சின்ன வயதில் இருந்தே நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். என் வளர்ச்சிக்குப் பின்னால் அவன் தான் இருந்தான். அவனது மன அழுத்தத்தை அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. மெளனமாகவே இருந்துவிட்டான். நான் ஒருவனை இழந்துவிட்டு நிற்கிறேன்.” என்று கூறினார். மேலும் அன்புச்செழியனை ஆதரித்து சிலர் கருத்து தெரிவிப்பதை பற்றி கேட்டனர். அதற்கு அது அவர்களின் கருத்து என கூறினார்.