“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்
விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது என இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
‘அட்டகத்தி’,‘மெட்ராஸ்’,‘கபாலி’,‘காலா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா.ராஞ்சித். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி திரைப்படங்களை இயக்கி வருகிறார். மேலும் நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். ‘நீலம் பண்பாட்டு மையம்’ தொடங்கி அதன் மூலம் பல செயற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் ‘வானம்’ என்ற கலைத்திருவிழா தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் நடத்தும் இந்த நிகழ்ச்சி ஆண்டு இறுதி நாட்களான 29 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னெடுக்கும் முயற்சியாக இருக்கும் என பா.ரஞ்சித் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூத்துப்பட்டறை, பறை இசை, ஆடல், பாடல் என நிகழ்ச்சிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிம்புவின் பெரியார் குத்து பாடல் தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், சிம்புவின் பெரியார் குத்து பாடல் நன்றாக இருந்தது. எது செய்தாலும் இங்கு விமர்சனத்துக்குள்ளாகும். கலைகளுக்கு வாழ்த்துகளும், விமர்சனமும் இருக்க வேண்டியது அவசியம். விமர்சனம் இல்லாத எந்த கலையும் வளராது எனவும் தெரிவித்தார்