ஒரு கையில் துப்பாக்கி.. ஒரு கையில் உலகம்! - ’ஜப்பான்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

ஒரு கையில் துப்பாக்கி.. ஒரு கையில் உலகம்! - ’ஜப்பான்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
ஒரு கையில் துப்பாக்கி.. ஒரு கையில் உலகம்! - ’ஜப்பான்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளன. பொன்னியின் செல்வனில் கதையை தாங்கிபிடிக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதேப்போல், சர்தார் படத்தில் பல கெட்டப்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், கார்த்தியின் 25 ஆவது திரைப்படமாக ஜப்பான் உருவாகி வருகிறது. இதனை, குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன், பிரபல தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் போஸ்டரில் ஒரு வீட்டில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஃபிரேமில் கார்த்தியின் படம் இருக்கிறது. கீழே உள்ள ஷோபாவில் கார்த்தில் கையில் மது பாட்டிலுடன் போதையில் இருப்பது போல் உள்ளது. சுவரில் உள்ள போட்டோவில் கார்த்தி உடை உள்ளிட்ட எல்லாமே தங்கத்தால் மிளிர்கிறது. அவர் கையில் தங்கத்தால் ஆன துப்பாக்கியும், மறு கையில் உலக உருண்டையில் வைத்திருக்கிறார். கழுத்தில் தொங்கும் டாலரில் இந்திய ரூபாயின் சிம்பிள் உள்ளது. அந்த அறையில் இரண்டு பெண்களும் இருக்கிறார்கள். இருவரும் மதுபோதையில் இருப்பதுபோல் உள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com