ஏப்ரலில் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’?

ஏப்ரலில் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’?
ஏப்ரலில் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’?

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தினை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவலால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது படக்குழு. இன்னும் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தினை வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், ஏப்ரலில்தான் விஜய்யின் ‘பீஸ்ட்’, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படங்களும் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com