\
கவனம் ஈர்க்கும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ கிளிம்ப்ஸ்

கவனம் ஈர்க்கும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ கிளிம்ப்ஸ்

கவனம் ஈர்க்கும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ கிளிம்ப்ஸ்
Published on

ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படாததால் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படம் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராம் சரணின் பாத்திரம் நெருப்பாகவும், ஜுனியர் என்.டி.ஆர்ரின் கதாபாத்திரம் நீராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சிகளும் அழகாய் காட்சியளிக்கும் ஆலியா பட்டும் கவனம் ஈர்க்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com