\
ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு

ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு

ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு
Published on

ராஜாமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில்தான், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், படம் வெளியாக இன்னும் சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில் படக்குழுவினர், “ ’ஆர்ஆர்ஆர்’படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

அக்டோபர் 13 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தோம். ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்திருக்கிறோம். தியேட்டர்கள் மூடியிருப்பதால் எங்களால் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியாது. உலக சினிமா சந்தை இயல்புக்கு திரும்பியதும் நாங்கள் விரைவில் தேதி அறிவிப்போம்” என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com