\
ஆறு கோடி பட்ஜெட்: ’ஆர்ஆர்ஆர்’ பட பிரண்ட்ஷிப் பாடலுக்காக இணைந்த பிரபாஸ்,ராணா,ரவிதேஜா

ஆறு கோடி பட்ஜெட்: ’ஆர்ஆர்ஆர்’ பட பிரண்ட்ஷிப் பாடலுக்காக இணைந்த பிரபாஸ்,ராணா,ரவிதேஜா

ஆறு கோடி பட்ஜெட்: ’ஆர்ஆர்ஆர்’ பட பிரண்ட்ஷிப் பாடலுக்காக இணைந்த பிரபாஸ்,ராணா,ரவிதேஜா
Published on

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது. 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டது. தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளனர். இப்படத்தில் ஸ்பெஷல் பிரண்ட்ஷிப் பாடல் ஒன்று எடுக்கப்படுவதாகவும், அதில், ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆருடன் பிரபாஸ், ரவிதேஜா, ராணா டகுபதி உள்ளிட்டவர்கள் நட்புக்காக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆறரை கோடியில் செட் அமைத்து எடுக்கப்படும் இப்பாடல் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் கதையும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, ராஜமெளலியின் ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸும் ராணாவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் இருந்த பிரபாஸ் இன்று ஹைதராபாத் வந்தடைந்தார் என்பதும் கவனத்திற்குரியது. நடிகை ஆலியா பட்டும் இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com