\
‘பொற்காலம் மீண்டும் வருகிறது’ : ’பொன்னியின் செல்வன்’ புதிய போஸ்டர் வெளியீடு

‘பொற்காலம் மீண்டும் வருகிறது’ : ’பொன்னியின் செல்வன்’ புதிய போஸ்டர் வெளியீடு

‘பொற்காலம் மீண்டும் வருகிறது’ : ’பொன்னியின் செல்வன்’ புதிய போஸ்டர் வெளியீடு
Published on

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் தன்னுடைய பெருங்கனவு என்று இயக்குநர் மணிரத்னம் பலமுறை தெரிவித்து வந்தார். தற்போதுதான், தன்னுடைய அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த 2019 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. முழுப்படமாக வெளியாகிறது என்றுதான் இத்தனைநாள் ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஸ்வீட் சர்ப்பரைஸாக இரண்டு பாகங்களாக வெளியாகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது புதிய போஸ்டர். போஸ்டரில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்' வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கேடயம், போர் வாள் மட்டுமே இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. சோழர்களின் முத்திரையான புலியின் உருவம் கேடயம் மற்றும் வாளில் பொறிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com