\
’கபிலன் - மாரியம்மா திருமணக் கொண்டாட்டம்’: கவனம் ஈர்க்கும் சார்பட்டா பரம்பரை இண்டாம் பாடல்

’கபிலன் - மாரியம்மா திருமணக் கொண்டாட்டம்’: கவனம் ஈர்க்கும் சார்பட்டா பரம்பரை இண்டாம் பாடல்

’கபிலன் - மாரியம்மா திருமணக் கொண்டாட்டம்’: கவனம் ஈர்க்கும் சார்பட்டா பரம்பரை இண்டாம் பாடல்
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’இன்று இரவு 12 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியாகிறது. ‘காலா’ வெற்றிக்குப்பிறகு, பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாய் அமைந்தது சமீபத்தில் வெளியான டிரெய்லர்.

இப்படத்தின், முதல் பாடலான ’நீயே ஒளி’வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், இன்று ‘வம்புல தும்புல மாட்டிக்காத’ இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. கபிலனாக நடித்துள்ள ஆர்யாவுக்கும், மாரியம்மாவாக நடித்துள்ள துஷாரா விஜயனுக்குமான திருமணக் கொண்டாட்டத்தையே ஆடம்பரமாக இல்லாமல் கும்மிருட்டிலும் ரசிக்கும்படியாக மிக அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் பா.ரஞ்சித். முதல் பாடலில் புத்தரின் ‘நீயே ஒளி’யை பாடலாக்கினார்கள். இரண்டாவது பாடலில் புத்தர் சிலையையே காட்டி குறியீடுகளை இந்தப் படத்திலும் வைத்துள்ளார். அதோடு, குறுகிய இடத்தில் குடிசை வீடுகள் சூழ்ந்திருக்க, அதற்கு தகுந்தார்போல் அமைக்கப்பட்டுள்ள நடனக் காட்சியும் கவனம் ஈர்க்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com