\
பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ படத்தினை கைப்பற்றிய அல்லு அர்ஜுனின் ’ஆஹா’ ஓடிடி தளம்

பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ படத்தினை கைப்பற்றிய அல்லு அர்ஜுனின் ’ஆஹா’ ஓடிடி தளம்

பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ படத்தினை கைப்பற்றிய அல்லு அர்ஜுனின் ’ஆஹா’ ஓடிடி தளம்
Published on: 

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ‘ரைட்டர்’ படத்தினை ’ஆஹா’ ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான ‘ரைட்டர்’ தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. சமுத்திரக்கனி, ஹரிக்கிருஷ்ணன்,கவிதா பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தனர். காவல்துறையில் நிலவும் சாதி அடக்குமுறைகளையும் காவலர்களின் ’ரைட்ஸ்’களையும் தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாகப் பேசி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்.

இந்த நிலையில், ‘ரைட்டர்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை தெலுங்கின் முன்னணி ஓடிடி தளமான ’ஆஹா’ கைப்பற்றியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும் மை ஹோம் நிறுவனமும் இணைந்து நடத்திவரும்‘ஆஹா’ ஓடிடி தளம் தற்போது தமிழிலும் விரைவில் வரவிருக்கிறது. இதற்கான, அறிவிப்பும் கடந்த பொங்கலன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சமுத்திரக்கனியும், அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘வெல்வோம்’ என்று ‘ஆஹா’ பக்கத்தினை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ரைட்டர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகவிருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com