\
'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பா.ரஞ்சித்

'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பா.ரஞ்சித்

'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பா.ரஞ்சித்
Published on

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.

அட்டகத்தி திரைப்படம் மூலம் தினேஷ் நாயகனாகவும் பா.ரஞ்சித் இயக்குநராகவும் அறிமுகமாகினர். இந்தப் படம் ரசிகர்களிடம் வெற்றி அடைந்ததால் பா.ரஞ்சித் முன்னணி இயக்குநராக வளர்ந்தார். அதேபோல் நடிகர் தினேஷ் அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்தார். இந்த நிலையில் தினேஷ் நடிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்தார்.

இதையடுத்து தற்போது அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு படத்தை மீண்டும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com