\
இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரை’: ட்ரெய்லர் நாளை வெளியீடு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரை’: ட்ரெய்லர் நாளை வெளியீடு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரை’: ட்ரெய்லர் நாளை வெளியீடு
Published on: 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.

‘காலா’ வெற்றிக்குப்பிறகு, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நடிகர் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சென்னையில் 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, 8 பேக் உடற்கட்டுடன் தன்னை தயார்படுத்தினார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், கேரக்டர்கள் அறிமுக வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கன் வேம்புலியாகவும், கலையரசன் வெற்றிச்செல்வனாகவும், சந்தோஷ் ராமனாகவும், பசுபதி ரங்கன் வாத்தியாராகவும், துஷாரா விஜயன் மாரியம்மாவாகவும், காளி வெங்கட் கோனி சந்திரனாகவும் படத்தில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகவே தயாரிப்பிலுள்ள இந்தப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த நிலையில், நாளை இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது என்று படக்குழு அறிவித்திருக்கிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com