ஓடிடியில் வெளியாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை'?

ஓடிடியில் வெளியாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை'?
ஓடிடியில் வெளியாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை'?

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ”சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ வெற்றிக்குப்பிறகு, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நடிகர் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சென்னையில் 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, 8 பேக் உடற்கட்டுடன் தன்னை தயார்படுத்தினார்.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கேரக்டர்கள் அறிமுக வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கன் வேம்புலியாகவும், கலையரசன் வெற்றிச்செல்வனாகவும், சந்தோஷ் ராமனாகவும், பசுபதி ரங்கன் வாத்தியாராகவும், துஷாரா விஜயன் மாரியம்மாவாகவும், காளி வெங்கட் கோனி சந்திரனாகவும் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின், டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், ”சார்ப்பட்டா பரம்பரை” படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் நேரடியாக அமேசான் பிரைமில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com