பா.ரஞ்சித் தயாரிப்பில் கவனம் ஈர்க்கும் ‘ரைட்டர்‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் கவனம் ஈர்க்கும் ‘ரைட்டர்‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் கவனம் ஈர்க்கும் ‘ரைட்டர்‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Published on

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.ரஞ்சித், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படம், அந்த ஆண்டு வசூலைக் குவித்ததோடு பாராட்டுகளையும் பெற்றது.அதனைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை தயாரித்தார். இப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகியோர்கள் 5 படங்களை இயக்குவதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த 5 இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் அறிவிப்பும் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. இதில், சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கிறார். பா.ரஞ்சித்தின் 'காலா' படத்தில் சமுத்திரகனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. போஸ்டரில் சமுத்திரக்கனி காவல்துறை கெட்டப்பில் மிரட்டுகிறார். ’இவர் காவல்துறை ரைட்டர்’ என்பதை போஸ்டர் உணர்த்துகிறது. மேலும், இன்று அம்பேத்கரின் பிறந்தநாளில் வெளியாகி இருக்கும் ரைட்டர் பட இரண்டு போஸ்டர்களில் சமுத்திரகனியின் கெட்டப் சட்டமேதை அம்பேத்கரை நினைவூட்டுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ’ரைட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு “மனித மனங்களின் தீராத அதிகார வேட்கைக்கு பலியாகும் எளிய மனிதர்களின் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த #writer” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com