\
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’
Published on: 

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ’மெட்ராஸ்’ திரைப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்கின்றனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் ’மெட்ராஸ்’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். விமர்சன ரீதியில் மட்டும் இல்லாமல் வசூல் ரீதியிலும் வெற்றியடைந்த ’மெட்ராஸ்’ திரைப்படத்தை, தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக, மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் செய்துள்ளார். அதேபோல், இவர் தயாரிப்பில் ஆர்யா நடித்த ’டெடி’ திரைப்படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com