\
மார்ச் 18-ல் வெளியாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’

மார்ச் 18-ல் வெளியாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’

மார்ச் 18-ல் வெளியாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’
Published on

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

‘பரியேறும் பெருமாள்’, ‘மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் ‘குதிரைவால்’ படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. பல சர்வதே திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்வான ‘குதிரைவால்’ மார்ச் 4-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் படத்தை தள்ளி வைத்தது படக்குழு. இந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு உறுதியாகியுள்ளது. வரும் மார்ச் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com