\
புதிய வீட்டிற்கு குடியேறிய மாரி செல்வராஜ்: நேரில் வாழ்த்திய ராம், பா.ரஞ்சித், உதயநிதி

புதிய வீட்டிற்கு குடியேறிய மாரி செல்வராஜ்: நேரில் வாழ்த்திய ராம், பா.ரஞ்சித், உதயநிதி

புதிய வீட்டிற்கு குடியேறிய மாரி செல்வராஜ்: நேரில் வாழ்த்திய ராம், பா.ரஞ்சித், உதயநிதி
Published on

இயக்குநர் மாரி செல்வராஜின் இல்ல கிரகப்பிரவேச விழாவிற்கு இயக்குநர்கள் ராம், பா.ரஞ்சித், நடிகர் உதயநிதி ஸ்டலின், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, தாணு தயாரிப்பில் வெளியான ‘கர்ணன்’ உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தினையும், பா.ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரமின் படத்தினையும் இயக்கவிருக்கிறார். தற்போது, உதயநிதியின் படத்திற்காக முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே சென்னையில் புதிய இல்லத்தையும் கட்டி முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். அந்த இல்லத்தில், தனது பெற்றோர்கள், மனைவி திவ்யா, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோருடன் சமீபத்தில் குடியேறினார்.

மாரி செல்வராஜின் குரு இயக்குநர் ராம் ஆசிர்வாதத்துடன் நடந்த இந்த நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு, நடிகர் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, விநியோக நிர்வாகி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com