\
ரஜினி ஜோடி யார்? இயக்குனர் விளக்கம்

ரஜினி ஜோடி யார்? இயக்குனர் விளக்கம்

ரஜினி ஜோடி யார்? இயக்குனர் விளக்கம்
Published on

ரஜினிகாந்த் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவில்லை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், ’2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 14-ம் தேதி தொடங்குகிறது. இதில் ரஜினி ஜோடியாக வித்யா பாலன் நடிப்பதாகவும் பிறகு தீபிகா படுகோன் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் படக்குழு இத்தகவலை உறுதிப்படுத்தாமல் இருந்தது.

இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இயக்குனர் பா.ரஞ்சித், படத்தில் தீபிகா படுகோன் நடிக்கவில்லை, அந்தச் செய்தி வதந்திதான் என்று கூறியுள்ளார். இதனால் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com