இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்
Published on

திருவள்ளூர் அருகே, இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் இன்று காலை காலமானார். 

‘அட்டகத்தி’ எனும் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார் பா.ரஞ்சித். அதன்பின்னர் "மெட்ராஸ்" படத்தை இயக்கினார். பின்பு, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை எடுத்தார். இவரது தந்தை பாண்டுரங்கன் திருவள்ளூர் அருகே வசித்து வந்தார். இந்நிலையில், 63 வயதான பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணியளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 5 மணியளவில் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கர்லப்பாக்கத்தில், இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com