நான் நலமுடன் இருக்கிறேன்: இயக்குநர் வாசு வீடியோ விளக்கம்
சமூக வலைத்தளங்கில் பரப்பப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து, தான் நலமுடன் இருப்பதாக இயக்குநர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் பி.வாசு. ஏராளமான வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதனிடைய பி.வாசுவின் உடல்நிலை குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியது.
இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக பி.வாசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ என்மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வணக்கம். என்னைப் பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே வாட்ஸ்அப்பில் வருகிறது. எனக்கு சிரிப்பே வந்துவிட்டது. ஜிம்மில் 6 கி.மீ நடந்துவந்த பின்தான் இந்த வதந்தியை பார்த்தேன். நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன். என்மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த வருடம் மேலும் மூன்று படங்களை இயக்க உள்ளேன். நன்றி” என தெரிவித்துள்ளார்.