‘சந்திரமுகி 2’ கதை ரெடி... மவுனத்தை கலைத்த இயக்குநர் வாசு..!

‘சந்திரமுகி 2’ கதை ரெடி... மவுனத்தை கலைத்த இயக்குநர் வாசு..!

‘சந்திரமுகி 2’ கதை ரெடி... மவுனத்தை கலைத்த இயக்குநர் வாசு..!
Published on

 ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக இயக்குநர் வாசு தெரிவித்துள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி‘. இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்தது. ஹாரர் மற்றும் காமெடி கலந்து இந்தப் படத்தில் ‘வேட்டையன்’ டாக்டர் சரவணன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அவருடன் பிரபு மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் ரஜினியும் வடிவேலும் இணைந்து கலக்கிய காமெடி காட்சிகள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வடிவேலு பேசிய ‘வச்சுட்டான்யா ஆப்பு’ என்ற வசனம் மறக்க முடியாததாக மாறியது. இதனை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. மொத்தம் இப்படம் 890 நாட்கள் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்டது. ஒரே திரையரங்கில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் திரையிடப்பட்ட இந்தப் படம் கோலிவுட்டில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

இதனியையே சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆக, எப்படியோ ‘சந்திரமுகி 2’ உறுதியாக எடுக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்த்திருந்த வேலையில் ‘சந்திரமுகி’ இயக்குநர் பி. வாசுவே முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

அவர் ஆன்லைன் மீடியா ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஏற்கெனவே ‘சந்திரமுகி 2’ திரைக்கதையை எழுதிவிட்டதாகவும் அதற்காக ஒரு நடிகரை அணுகி கதை கூறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பெரிய தயாரிப்பாளரையும் சந்தித்து கதையை விளக்கி உள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். ஆனால் ரஜினியிடம் பேசியதாக அவர் கூறவில்லை. எனவே இந்தப் படத்தில் அவருக்குப் பதிலாக யார் நடிப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவர் ‘சந்திரமுகி’ இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ‘ஆப்த ரட்சகா’ என ஏற்கெனவே இயக்கி வெளியிட்டுவிட்டார். அந்தப் படம் பெரிய வெற்றியை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com