இயக்குநர் மிஸ்கின்
இயக்குநர் மிஸ்கின்web

BAD GIRL | ஆண்களுக்கு புரியாது.. பெண்களிடம் கேட்கவேண்டும்! - இயக்குநர் மிஸ்கின்

‘BAD GIRL’ படம் குறித்து ஆண்களே பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு புரியாது பெண்களிடம் கேளுங்கள் என்று இயக்குநர் மிஸ்கின் பேசியுள்ளார்.
Published on
Summary

வெற்றிமாறன் தயாரிப்பில் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’BAD GIRL' படத்தின் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சூழலில் படம் குறித்து ஆண்களுக்கு புரியாது பெண்களிடம்தான் கேட்க வேண்டும் என்று இயக்குநர் மிஸ்கின் பேசியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் Bad Girl. இயக்குநர் வர்ஷா பரத் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இத்திரைப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

அஞ்சலி சிவராமன், டீஜெ போன்றோர் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. டீசர் வெளியானதில் இருந்து அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள், இயக்குநரின் சர்ச்சைக்குரிய பேச்சு என ஒட்டுமொத்த எதிர்ப்பையும் இப்படம் கண்டது. தணிக்கை சான்று பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக சர்ச்சை வெளியானது.

பேட் கேர்ள்
பேட் கேர்ள்x

பெரிய சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு Bad Girl திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்கில் வெளியாகயிருக்கிறது.

இந்நிலையில் நேற்று ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட இயக்குநர் மிஸ்கின் படம் சார்ந்த புரிதல் ஆண்களுக்கு இருக்காது என்று பேசியுள்ளார்.

இயக்குநர் மிஸ்கின்
”கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்களின் வேலை அல்ல..” - 'BAD GIRL' பட இயக்குநர் வர்ஷா பரத்

படம் குறித்து பெண்களிடம் கேட்க வேண்டும்..

Bad Girl படத்தின் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வெற்றிமாறன், திரைப்பட இயக்குநர் வர்ஷா பரத், இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய படத்தின் இயக்குநர் வர்ஷா பரத், “Bad Girl படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது பலரும் இப்படத்தை குப்பை படம் என்றும், கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தனர்.

கலாச்சாரம்தான் பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, பெண்கள் கலாச்சாரத்தை பாதுக்காக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாச்சாரத்தை காக்க வேண்டிய வேலை எங்களுடையது அல்ல. கடவுளும் கலாச்சாரமும் தான் பெண்களை காக்க வேண்டும்” என்று பேசினார்.

இயக்குநர் மிஸ்கின்
"இதோட கடையை சாத்துறோம்" - தயாரிப்பாளராக பல்வேறு சிக்கல்கள்.. வெற்றிமாறன் முக்கிய அறிவிப்பு..

அதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஸ்கின், “இந்த படத்திற்கான பெயரை ஏன் இயக்குநர் வர்ஷா 'Bad Girl' என வைத்தார். ஏன் 'Good Girl' என வைக்கவில்லை? அதை உற்று நோக்கவேண்டும். வர்ஷா சமூகத்தை விளக்கமாத்த எடுத்து கூட்டுவதற்கு ஒன்றும் வரவில்லை, எங்களை விளக்கமாத்தால் அடிக்காதீங்கனு சொல்றதுக்காக வந்திருக்கிறார்.

படம் குறித்து தொடர்ந்து ஆண்களே பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அந்தரங்கத்தை பற்றியும், ஆசைகளை பற்றியும் பேசும் படம். அது ஆண்களுக்கு புரியாது, ஒரு பெண்ணிடம் கேட்கலாம் என்று கேட்டேன். பெண்களுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னார்” என்று பேசியுள்ளார்.

இயக்குநர் மிஸ்கின்
ரூ.1000 கோடி வசூல் படங்கள் தெலுங்கில் அதிகரிப்பது ஏன்? சிவகார்த்திகேயன் சொன்ன விசயம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com