\
மிஷ்கினின் ‘பிசாசு 2’ .. டீசர் அப்டேட் வெளியிட்ட படக்குழு

மிஷ்கினின் ‘பிசாசு 2’ .. டீசர் அப்டேட் வெளியிட்ட படக்குழு

மிஷ்கினின் ‘பிசாசு 2’ .. டீசர் அப்டேட் வெளியிட்ட படக்குழு
Published on

‘பிசாசு 2’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் ’பிசாசு 2' படப்படிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்தது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பெங்களூரில் நிறைவுற்றன. வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின், தெலுங்கு உரிமையை ‘விஜய் 66’ இயக்குநர் தில்ராஜு கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகிறது என்று அண்ட்ரியாவின் மிரட்டலான போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com