\
"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்"-ஏ.ஆர்.முருகதாஸ்

"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்"-ஏ.ஆர்.முருகதாஸ்

"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்"-ஏ.ஆர்.முருகதாஸ்
Published on

லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து ரஜினிகாந்த் ஆன்மிகப் பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் ‘தர்பார்’ படம் குறித்தும் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்தும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆனந்த விகடன் வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கேள்வி: தனிப்பட்ட முறையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி உங்கள் கருத்து ? 

"ரஜினி சார் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். யாரைப் பற்றியும் தப்பாகப் பேசவே மாட்டார். இன்னும் சொல்லப்போனா, எல்லோரைப் பத்தியும் நல்ல விதமாவே சொல்லுவார். சக மனுஷனை அதட்ட மாட்டார். மனதிற்கு தோன்றதை அப்படியே பேசுவார். சாதாரண கார்ல ஒற்றை ஆளா வருவார், போவார். ஆனால், இந்த அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை" என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com